மாஸ்க் அணியச் சொன்ன தந்தை, மகன் மீது கொடூர தாக்குதல்!

மாஸ்க் அணியச் சொன்ன தந்தை, மகன் மீது இளைஞர்கள் கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் குருகிராம் மாவட்டம் நியூ காலனி பகுதியை சேர்ந்த தர்மேந்திர தாஸ், அவரது மகன் குஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள பேக்கரிக்கு சென்றனர். அங்கு இளைஞர்கள் சிலர் மாஸ்க் அணியாமல் பேசிக்கொண்டிருந்ததை பார்த்த இருவரும் மாஸ்க் அணியுமாறு கூறினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர்கள் தந்தை மற்றும் மகனை கடுமையாக தாக்கியுள்ளனர். தாக்குதலில் தர்மேந்திராவுக்கு தோள்பட்டையிலும், அவரது மகன் குஷ்சிற்கு மூக்கு, காது, தலை ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து தர்மேந்திர தாஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தாக்குதல் நடத்தியவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
newstm.in