அக்கா தம்பி வெட்டி படுகொலை.. வெளியான பகீர் தகவல்..!
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள தும்பல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜா - சித்ரா தம்பதியினர். இவர்களுக்கு நவீனா என்ற மகளும், சுகன் என்கிற மகனும் உள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நவீனா 12ஆம் வகுப்பும், சுகன் 8ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த இருவரும் தோட்டத்தில் பூப் பறிக்கச் சென்றபோது, அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த அவர்களது சித்தப்பா தனசேகர் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். அதைத் தொடர்ந்து, குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு தந்தை ராஜா ஓடிவந்து பார்த்த போது மகனும், மகளும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனையடுத்து, அங்கு வந்த ராஜாவையும், தனசேகரன் வெட்டியுள்ளார். இதில் ராஜாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். தொடர்ந்து, அக்கா, தம்பி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, அங்கு வந்த உறவினர்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ராஜாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தனசேகரின் அப்பாவும், ராஜாவின் அப்பாவும் அண்ணன் தம்பிகள் எனவும், பங்காளி முறையில் உறவினரான ராஜாவிற்கும், தனசேகரனுக்கும் ஏராளமான கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளதாகவும், அதனால் ஆத்திரமடைந்த தனசேகரன் ராஜாவின் குழந்தைகளை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ராஜாவின் இரண்டு குழந்தைகளை தனசேகர் அண்மையில் வெட்டிக் கொன்ற நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில், ராஜா தன் மனைவியிடம் தவறாக நடக்க முயன்றதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரின் குழந்தைகளை கொன்றதாகவும், அந்த சமயத்தில் ராஜா போனில் பாட்டுக் கேட்டதாகவும் தனசேகர் கூறினார்.