#BREAKING மகிழ்ச்சி... மீண்டும் 5 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு !

தமிழகத்தில் ஒரே நாளில் மேலும் 4,666 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,65,930ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரத்தில் தமிழகத்தில் ஒரே நாளில் 5,117 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் மொத்தம் 6,12,320 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இன்று கொரோனாவுக்கு தமிழகத்தில் 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத தாண்டியுள்ளது.
மற்ற மாவட்டங்களில் கொரோனா குறைந்து வந்தாலும் சென்னையில் ஆயிரத்திற்கும் அதிகமாகவே கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பதிவாகி வருகிறது. அந்த வகையில் இன்று ஒரே நாளில் 1,164 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
newstm.in