#BREAKING குட் நியூஸ்… தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா!

#BREAKING குட் நியூஸ்… தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா!

#BREAKING குட் நியூஸ்… தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா!
X

தமிழகத்தில் ஒரே நாளில் 3,086 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,97,116 ஆக அதிகரித்துள்ளது.

இன்று தினசரி பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. 3086 பேருக்கு மட்டுமே இன்று நோய் தொற்று புதிதாக ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

சென்னையின் பாதிப்பும் வெகுவாக குறைந்துள்ளது. ஒரே நாளில் புதிதாக 845 பேர் மட்டுமே வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

ஒரே நாளில் 4301 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 6.50 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்டங்களை பொறுத்தவரை கோவை மாவட்டத்தில் 314 பேரும், சேலம் மாவட்டத்தில் 198 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 159 பேரும் ஒரே நாளில் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

newstm.in

Next Story
Share it