1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : பி.எஸ்.எல்.வி., - சி59 ராக்கெட் ஏவுதல் திடீர் ஒத்திவைப்பு..!

Q

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ஒரு அங்கமான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் அமைப்பு மூலமாக வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் வணிகரீதியாக விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சூரியனை ஆராய்வதற்காக ப்ரோபா-3 எனும் இரட்டை செயற்கைக்கோளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு (இஎஸ்ஏ) நிறுவனம் வடிவமைத்தது.

இந்த செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி ராக்கெட் வாயிலாக விண்ணில் நிலைநிறுத்த இஎஸ்ஏ நிறுவனத்துடன், இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

அதன்படி ப்ரோபா-3 செயற்கைக்கோள், பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலமாக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து இன்று (டிச.4) மாலை 4.08 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்தது. ராக்கெட் ஏவுதலுக்கான 25 மணிநேர கவுன்ட்டவுன் நேற்று மாலை 3.08 மணிக்கு தொடங்கியது.

இந்நிலையில் செயற்கைக்கோளில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து பி.எஸ்.எல்.வி.,-சி 59 ராக்கெட் ஏவுவது நாளை மாலை 4:12 மணிக்கு ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது.

Trending News

Latest News

You May Like