#BREAKING டிடிவி தினகரனை சந்திக்கிறார் ஓபிஎஸ்!!
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சற்றுநேரத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க உள்ளார்.
திருச்சி மாநாட்டிற்கு பிறகு சசிகலா , டிடிவி தினகரன் ஆகியோரோடு ஒன்றிணைந்து பயணிப்போம் என்று ஏற்கனவே ஓ.பன்னீர் செல்வம் கூறியிருந்தார். ஏனென்றால் சட்டப்போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால், ஓபிஎஸ் கூட்டு சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
எனவே தான், சசிகலா, டிடிவி தினகரை சந்திப்போம் என்று ஓபிஎஸ் தொடர்ந்து கூறிவந்தார். அவர்களுடன் சேர்ந்து எடப்பாடி பழனிசாமியை எதிர்க்க வியூகம் அமைத்து வருகிறார் ஓபிஎஸ்.
இந்நிலையில்தான் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் டிடிவி தினகரனை, சற்றுநேரத்தில் ஓபிஎஸ் சந்தித்து பேச உள்ளார். டிடிவி தினகரனை இரவு 7 மணி அளவில் அவரது இல்லத்தில் ஓபிஎஸ் சந்திக்கிறார். இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in