1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : சென்னை ரயில் தடம் புரண்டது..!!


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 7.25 மணிக்கு டபுள் டெக்கர் ரயில்(22625) பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில் நிலையம் புறப்பட்டுச் சென்றது.இந்நிலையில், குப்பம் ரயில் நிலையத்தை கடந்து காலை 11.15 மணியளவில் பங்காருபேட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் இருந்து ரயிலின் பெட்டி புரண்டதை தொடர்ந்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.பெங்களுரு ரயில் தடம்புரண்டுள்ள நிலையில், அவ்வழியாகச் செல்லும் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது

Trending News

Latest News

You May Like