1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : கள்ளச்சாராய விற்பனையில் முதல்வர் அதிரடி உத்தரவு..!!


கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் இது தொடர்பாக ஆட்சியர், எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், “கள்ளச்சாராயத்தில் மெத்தனாலை பயன்படுத்தியதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டோருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசின் உத்தரவை மீறி கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களை கண்காணிக்காமல் தவறிய காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மேலும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறியவர்கள் மீது தயவு தாட்சண்ணியமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

Trending News

Latest News

You May Like