#BREAKING ஓபிஎஸ் – டிடிவி தினகரன் ஒன்றிணைய முடிவு!!
தமிழ்நாடு அரசியலில் பெரிய திருப்பமாக ஓ.பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் டிடிவி தினகரனை, அவரது அடையாறு இல்லத்தில் ஓபிஎஸ் சந்தித்து பேசினார். சந்திப்பின்போது, ஓ.பன்னீர் செல்வம் உடன் பன்ருட்டி ராமச்சந்திரனும் உடன் இருந்தார்.
இந்த சந்திப்பை தொடர்ந்து ஓபிஎஸ், டிடிவி தினகரன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இருவரும் ஒன்றிணைந்து செயல்பட இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அப்போது பேசிய ஓபிஎஸ், சசிலா வெளியூர் சென்றிருப்பதால் அவரை சந்திக்க முடியவில்லை என்றும், விரைவில் அவரை சந்திப்பேன் என்றும் கூறினார். அதிமுகவின் அனைத்து தொண்டர்களும் ஒன்றிணைய வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் அவர் கூறினார்.
டிடிவி தினகரன் பேசியபோது, உண்மையான அதிமுக தொண்டர்கள் கையில் கட்சியை ஒப்படைப்பதே தங்களின் நோக்கம் என்றும், அதனால் ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இலக்கை அடைய ஓபிஎஸ் – டிடிவி தினகரன் இணைந்து செயல்பட உள்ளதாக கூறிய மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், கடந்த காலத்தை பற்றி பேசாமல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
newstm.in