#BREAKING : எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு

எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கு Y+ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், வரும் 7-ந்தேதியில் இருந்து தமிழகம் முழுவதும் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதால் கூடுதல் பாதுகாப்பு அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.