1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : தவெக தலைவர் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு..!

Q

நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், பிரபலங்களுக்கு உளவுத் துறையின் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு ‘ஒய்’, ‘இசட்’ எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் பாதுகாப்பு வழங்குகிறது. அந்த வகையில் தவெக தலைவர் விஜய்க்கு ‘ஒய்’ (Y) பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி 8 முதல் 11 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த கமாண்டோக்கள் சுழற்சி முறையில் விஜய்யின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் எனத் தெரிகிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் நடிகர் விஜய், புதிய கட்சி தொடங்கினார். அவர் கட்சித் தொடங்கி சில மாதங்களிலேயே மக்களவைத் தேர்தல் வந்தாலும் கூட அதில் போட்டியும் இல்லை யாருக்கும் ஆதவும் இல்லை என்ற நிலைப்பாட்டுடன் இயங்கத் தொடங்கினார்.

விஜய்க்கு சமூக ஊடகங்களில் அச்சுறுத்தல் எழுந்த நிலையில், அவரின் பாதுகாப்பு கருதி ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவானது வருகின்ற மார்ச் 14 முதல் அமலுக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வெளிநாட்டு பவுன்சர்கள் விஜய்யின் பொது நிகழ்ச்சிகளில் அவருக்கான பாதுகாப்பை உறுதி செய்து வரும் நிலையில், இனி மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை கமாண்டோக்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் விஜய் இருப்பார்.

தமிழகத்தில் மட்டும் விஜய்க்கு பாதுகாப்பு அளிக்கவுள்ளனர்.

Trending News

Latest News

You May Like