#BREAKING : WWE லெஜண்ட் 'ஹல்க் ஹோகன்' காலமானார்..!
உலக மல்யுத்த பொழுதுபோக்கு (WWE) ஜாம்பவான் ஹல்க் ஹோகன் காலமானார்..
மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஹல்க் ஹோகன் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டாலும், அவரது இயற்பெயர் டெர்ரி பொல்லியா என்பதாகும். 1980கள், 90களில் பெரும் புகழுடன் திகழ்ந்த இவர் WWE மல்யுத்தம் (பின்னர் WWF) உலகம் முழுவதும் பிரபலமாக முக்கிய காரணமாக இருந்தார். இவரது மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2012ம் ஆண்டு மல்யுத்தப் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்ற பின் சில திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தோன்றியுள்ளார். புளோரிடாவில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வந்த நிலையில் மாரடைப்பால் காலமானார்.