#BREAKING : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சேலத்தை சேர்ந்த பெண் கூட்ட நெரிசலில் பலி!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 10ம் தேதி துவங்கி, ஜனவரி 19ம் தேதி வரை வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற உள்ளது. இந்த பத்து நாட்களும் சாமானிய மக்கள் அதிக அளவில் சாமி தரிசனம் செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும். அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல முக்கிய சேவைகள், சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த பத்து நாட்களும் 7 லட்சம் வரையிலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு உண்டான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 08ம் தேதி துவங்கி வைகுண்ட துவார தரிசனத்திற்கான எஸ்எஸ்டி டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக திருப்பதியில் 9 இடங்களிலும், திருமலையில் ஒரு இடத்திலும் சென்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பதி மற்றும் மற்ற மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் திருப்பதியில் உள்ள 9 மையங்களில் அமைக்கப்பட்டுள்ள கவுண்ட்டர்களிலும், திருமலையில் இருப்பவர்கள் திருமலையில் உள்ள மையத்திலும் வைகுண்ட துவார தரிசனத்திற்கான எஸ்எஸ்டி டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம்.
டிக்கெட் மற்றும் டோக்கன் இல்லாத பக்தர்கள் திருமலைக்கு வந்தாலும் வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி நாளான ஜனவரி 10ம் தேதி காலையில் தங்க தேரோட்டமும், ஜனவரி 11ம் தேதி காலை சக்ர ஸ்நான உற்சவமும் நடைபெற உள்ளது. இதற்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்கள் தேவஸ்தானத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றி, சிரமமின்றி சாமி தரிசனம் செய்யலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன டோக்கன்கள் வாங்குவதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளால் சேலத்தை சேர்ந்த மல்லிகா |என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..4 பேர் காயம் அடைந்துள்ளனர்
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் பிரவேசம் காண இலவச டோக்கன் நாளை காலை முதல் வழங்கப்பட உள்ளது. நாளை அதிகாலை இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட உள்ள நிலையில் முதல்நாளே கவுன்ட்டர்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் அதிகளவில் குவிந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சேலத்தைச் சேர்ந்த மல்லிகா என்பவர் உயிரிழந்தார்.