#BREAKING : பெண் டி.எஸ்.பி.யின் தலைமுடியை பிடித்து அட்டூழியம்... போராட்டத்தில் களேபரம்!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பெருமாள் தேவன் பட்டியை சேர்ந்தவர் காளிக்குமார் (வயது 33). சரக்கு வாகனத்தின் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் காளிக்குமார் தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாய் பதிப்பதற்கான உதிரி பாகங்களை ஏற்றிக் கொண்டு சரக்கு வாகனத்தில் திருச்சுழி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருச்சுழி - ராமேஸ்வரம் சாலையில் கேத்த நாயக்கன்பட்டி விலக்கு அருகே திடீரென காளிக்குமார் ஒட்டி சென்ற சரக்கு வாகனத்தை, இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்து உள்ளனர். அப்போது சரக்கு வாகனத்தை நிறுத்தி விட்டு காளிக்குமார் கீழே இறங்கி உள்ளார். அந்த மர்ம கும்ப கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த திருச்சுழி காவல் நிலைய போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த காளிக்குமாரை திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் டிரைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் பெண் DSP-யின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கிய போராட்டக்காரர்களால் பரபரப்பு ஏற்பட்டள்ளது. மறியலில் ஈடுபட முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளு சம்பவத்தில் பரபரப்பு..