#BREAKING : DSP சுந்தரேசனுக்கு என்னாச்சு..? மருத்துவமனையில் அனுமதி..
மது விலக்கு அமலாக்கப் பிரிவில் டிஎஸ்பியாக பணிபுரிந்து வந்தவர் சுந்தரேசன். இவர், அண்மையில் காவல் நிலையத்துக்கு நடந்த சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவத்தை அடுத்து, காவல் துறைக்கும் இவருக்கும் இடையே உள்ள பல்வேறு அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் வெளியாகின.
இதைத் தொடர்ந்து, டிஎஸ்பி சுந்தரேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தனது அரசு வாகனத்தை அமைச்சரின் பாதுகாப்பு பணிக்காக உயர் அதிகாரிகள் கேட்பதாகவும், அதை சட்ட விதிகளுக்கு அப்பாற்பட்டு வழங்க முடியாது எனவும் கூறியதால் எனது வாகனத்தை பறித்துள்ளனர். இதனால், தான் நான் வீட்டிலிருந்து காவல் நிலையத்துக்கு நடந்து சென்றேன்.
என் மீது எந்த குற்றச்சாட்டும் கிடையாது. தான் நேர்மையாக பணிபுரிவதால் என் மீது களங்கம் விளைவிக்கும் வகையில் பல்வேறு குற்ற சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் நான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறேன் என்று ஆவேசமாக பேசி இருந்தார்.
இதற்கு மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி ஸ்டாலின் கூறுகையில், டிஎஸ்பி சுந்தரேசன் மீது காவல்துறையிலிருந்து எந்தவித அழுத்தமும் தரப்படவில்லை. அவர் ஏன் இப்படி கூறுகிறார் என்றும் தெரியவில்லை என்று தெரிவித்தார். இதனிடையே, மாவட்ட காவல்துறை சார்பில் விளக்கு அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. அதில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி சுந்தர் அரசனுக்கு அவரது வாகனத்தை வாங்கிவிட்டு அதற்கு மாற்றாக மற்றொரு வாகனம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தது உண்மைக்கு புறம்பானது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.மேலும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் மீது எடுக்கப்பட்ட பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்தும் காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து டிஎஸ்பி சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தான், டிஎஸ்பி சுந்தரேசன் திடீரென சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுந்தரேசனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.