#BREAKING : வானிலை ஆர்வலர்கள் அலர்ட்..! வங்கக்கடலில் உருவாகும் 'ஃபெங்கல் புயல்'..!
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வங்கக்கடலில் புயல்கள் உருவாவது இயல்பானதுதான். இந்த புயல்கள் பல நேரங்களில் ஒடிசா, மேற்கு வங்கம் நோக்கி நகர்ந்துவிடும். சில நேரங்களில் தமிழ்நாட்டை நோக்கி வருவதுண்டு. அதிலும் சென்னையை நோக்கி வரும்போது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திவிடுவதுண்டு. அந்த வகையில் இந்த ஆண்டு தற்போது வங்கக்கடலில் வளிமண்டலே மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது.
இது தாழ்வு மண்டலமாக இருந்து வலுவிழந்துவிட்டால் பிரச்னை இல்லை. ஆனால், புயலாக வலுப்பெற்றால் சென்னைக்கு சிக்கல்தான். ஏனெனில் இதன் பாதை சென்னையை நோக்கித்தான் இருக்கிறது.
இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளை (நவ., 27) உருவாகும் புயலுக்கு 'ஃபெங்கல்' என பெயரிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 800 கி.மீ. தொலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது.
அடுத்த 2 நாட்களில் தமிழ்நாடு, இலங்கை கடலோரப்பகுதிகளை நெருங்கக்கூடும் என்பதால், 20 செ.மீ. வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும். அதற்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த FENGAL என்ற பெயர் வைக்கப்படும். சென்னை மற்றும் புறநகரில் இன்று முதல் 28ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது