#BREAKING : நாடு முழுவதும் அமலுக்கு வந்த வக்ப் திருத்தச்சட்டம்..!

வக்ப் வாரியத்தை சீரமைக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு வக்ப் திருத்தச் சட்ட மசோதாவை அறிமுகம் செய்தது. கூட்டுப் பார்லிமென்டரி குழு ஆய்வு செய்து அறிக்கை வழங்கிய பிறகு இந்த மசோதா மீண்டும் பார்லியில் அறிமுகம் செய்யப்பட்டது.
பார்லியின் இரு அவைகளிலும் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்த நிலையில் சட்டம் இறுதி செய்யப்பட்டது. தற்போது இந்த சட்டம், நாடு முழுவதும் இன்று (ஏப்.,8) முதல் அமலுக்கு வந்தது என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த சட்டத்தை எதிர்த்து தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளனர். இன்று வரை 10 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதை எதிர்பார்த்திருந்த மத்திய அரசு,இன்று சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளது.
அதாவது, வக்ப் சட்டத்தை எதிர்த்து யாரேனும் மனு தாக்கல் செய்தால், தங்களது கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என்று வலியுறுத்தி மத்திய அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சட்டத்தை எதிர்க்கும் மனுக்கள் மீதான விசாரணை ஏப்.,15ல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.