1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : தீவிர அரசியலில் இருந்து விலகுகிறேன் - வி.கே.பாண்டியன்..!

1

தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வி.கார்த்திகேய பாண்டியன் (வி.கே.பாண்டியன்) 2000ம் பேட்சை சேர்ந்த ஒடிசா கேடர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆவார். சமீபத்தில், அவர் அரசு பொறுப்பை உதறி விட்டு, நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜூ ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு வி.கே.பாண்டியன் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.இதன் எதிரொலி தேர்தலில் தெரிந்தது.

ஒடிஷாவில்  நவீன் பட்நாயக் தொடர்ந்து ஆறாவது முறையாக ஆட்சி அமைப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் மாநிலத்தில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் 20 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், சட்டமன்றத் தேர்தலில் பிஜேடி கட்சியை தோற்கடித்து, மாநிலத்தில் உள்ள 147 இடங்களில் 78 இடங்களை கைப்பற்றியது, இது அரசாங்கத்தை அமைக்க தேவையான 74 இடங்களை விட நான்கு இடங்கள் அதிகம்.பிஜேடிக்கு 51 இடங்களும், காங்கிரசுக்கு 14 இடங்களும், சுயேச்சைகளுக்கு 3 இடங்களும், சிபிஎம் கட்சிக்கு ஒரு இடமும் கிடைத்தன.
கடந்த மக்களவைத் தேர்தலில் 12 இடங்களில் வெற்றி பெற்ற பிஜேடி, இம்முறை ஒரு இடத்தைக் கூட பிடிக்கவில்லை.

நவீனின் கட்சி தேர்தலில் படுமோசமாக தோல்வியடைந்தது மட்டுமல்லாமல், தனது 27 ஆண்டுகால வெற்றிகரமான அரசியல் வாழ்க்கையில் முதல்முறையாக தோல்வியை சந்தித்துள்ளார்.

வி.கே.பாண்டியனிடம் கட்சியின் தலைமைப் பொறுப்பை முழுமையாக ஒப்படைத்தது தான் அவரது தோல்விக்கு மிகப்பெரிய காரணம் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக விஜேடி தலைவர்களுள் ஒருவரான வி.கே.பாண்டியன் கூறியுள்ளார். இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள வி.கே.பாண்டியன், பதவிக்காகவோ பொறுப்புக்காகவோ அரசியலுக்கு வரவில்லை என கூறியுள்ளார். மேலும், ஒடிசாவில் நவீன் பட்நாயக்கிற்கு உதவுவதற்காகவே அரசியலுக்கு வந்தேன் என அவர் தெரிவித்துள்ளார். 


 


 

Trending News

Latest News

You May Like