#BREAKING : மஞ்சு விரட்டில் பார்வையாளர் பலி..!
மதுரை, எலியார்பத்தியில் இன்று நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டியதில் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ரமேஷ் என்ற இளைஞர் பலியானார். இளைஞரின் இடது மார்பில் காளை குத்தியதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மதுரை எலியார்பட்டி கிராமத்தில் மஞ்சு விரட்டு நடந்தது. போட்டியை பார்வையிட ஏராளமான மக்கள் குவிந்திருந்தனர். அப்போது, பார்வையாளர் பகுதியில் இருந்த ரமேஷ் என்ற இளைஞரை காளை குத்தியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதபமாக உயிரிழந்தார். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டில் நடக்கும் முதல் மரணமாகும்.