1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : வினேஷ் போகத் வெற்றி..!

1

அரியானாவில் 2 முறை ஆட்சியில் நீடித்து வரும் பா.ஜ.க. 3-வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடித்து ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது. எனினும், இந்த தேர்தலில் வெற்றியை பெற காங்கிரசும் பலத்த எதிர்பார்ப்புடன் உள்ளது.

இந்நிலையில், மல்யுத்த விராங்கனையும், ஜுலானா தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான வினேஷ் போகத் பின்னடைவை சந்தித்து வந்த நிலையில் வினேஷ் போகத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

அண்மையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து, தனக்கு வெள்ளிப் பதக்கம் தர வேண்டி வினேஷ் போகத் தாக்கல் செய்த மனுவை சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.இதையடுத்து நாடு திரும்பிய வினேஷ் போகத், ராகுல் காந்தியை சந்தித்து பரபரப்பு ஏற்படுத்தினார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு அரியானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். 

Trending News

Latest News

You May Like