#BREAKING : விளவங்கோடு இடை தேர்தல் தேதி அறிவிப்பு..!
கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் மூன்று முறை எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் விஜயதரணி. தமிழக சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின் முதன்மை கொறடா, காங்கிரஸ் அகில இந்திய மகளிரணி அணி பொறுப்பு உள்ளிட்ட பதவிகளில் இருந்து வந்தார். இந்த நிலையில், அவர் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.
வரும் லோக்சபா தேர்தலில் சீட் கேட்டு டெல்லி காங்கிரஸ் தலைமையிடம் பேசியதாகவும், ஆனால், விஜயதரணிக்கு சீட் கொடுக்க காங்கிரஸ் தலைமை விரும்பவில்லை என்றும், அவர் தற்போது எம்.எல்.ஏவாக இருப்பதால் எம்.பி சீட் மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், அதிருப்தியில் இருந்து வந்த விஜயதரணி, பாஜக மேலிடத்தில் பேசி, எல்.முருகன் தலைமையில் அக்கட்சியில் இணைந்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் விஜயதரணி இணைந்த நிலையில் அவரை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கி காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் உத்தரவிட்டுள்ளது விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பதவி காலியானதால் தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி அங்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விளவங்கோடு தொகுதியில் ஏப்ரல் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி பதவி விலகியதால் இத்தேர்தல் நடத்தப்படுகிறது. மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் அதே நாளில் விளவங்கோடு இடைத் தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெறவுள்ளது.