1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நேரம் மாற்றம்..!

1

சந்திரயான்-3 வின்கலம் எல்விஎம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

நிலவின் புவிவட்ட சுற்றுப்பாதையில் உள்ள சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டரை பிரிக்கும் முக்கியமான பணி நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்டது. விக்ரம் லேண்டர், விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்த பிறகு, நிலவின் முதல் படங்களை பகிர்ந்துள்ளது. இந்தியாவின் விண்வெளி நிறுவனமான இஸ்ரோ, லேண்டர் இமேஜர் (எல்ஐ) கேமரா-1 மூலம் எடுக்கப்பட்ட பிரமிக்க வைக்கும் படங்களை, ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. படங்களின் தொகுப்பு நிலவில் உள்ள வெவ்வேறு பள்ளங்களைக் காட்டுகிறது.

சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் பிரிந்த பின்னர் அதன் தூரம் இரண்டாவது முறையாக வெற்றிகரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தகட்டமாக நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறக்கப்படுவது மட்டுமே பாக்கி இருக்கிறது. வரும் 23ம் தேதி மாலை 5.45 மணிக்கு இது நிலவில் மெல்ல தரையிறங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், ஆக.23ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு தென்துருவத்தில் லேண்டர் தரையிறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அது மாலை 6.04க்கு மாற்றப்படுவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வை மாலை 5.27 மணியிலிருந்து நேரலை செய்ய உள்ளதாகவும் ISRO தெரிவித்துள்ளது.

 

Trending News

Latest News

You May Like