#BREAKING கொரோனாவில் இருந்து குணமடைந்தார் விஜயகாந்த்.. மருத்துவமனை அறிக்கை !

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார் என தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், கொரோனா அறிகுறிகள் ஏதும் இல்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் சிகிச்சையால் விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இருவரின் உடல்நிலையும் சீராக உள்ளதாகவும், மருத்துவர்கள் கண்காணித்து சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
newstm.in