1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது..!

Q

தமிழ் சினிமாவில் 1970களின் பிற்பகுபதி, 80, 90 மற்றும் 2000களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். தமிழ் சினிமாவில் சுமார் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் விஜயகாந்த்.

நடிகர் விஜயகாந்தை, அவரது ரசிகர்கள் கேப்டன் என்று அன்போடு அழைத்து வந்ததனர். தொடர்ந்த அரசியலில் தடம்பதித்த நடிகர் விஜயகாந்த் கடந்த 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை துவங்கினார்.

2011 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்த விஜயகாந்த் தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்தார். தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக உருவெடுத்தார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டட நடிகர் விஜயகாந்த், பின்னர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது இறுதிச்சடங்கில் ஏராளமானோர் பங்கேற்றனர். விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி தலைமை அலுவலகமான தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

விஜயகாந்தின் நினைவிடத்திறகு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்தின் நினைவிடத்தில் நாள்தோறும் அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. 

விஜயகாந்த் நினைவிடத்தில் 125 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அஞ்சலி; 

விஜயகாந்தின் நினைவிடத்திடத்திற்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது; 

பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவுச்சின்னமாக இது போற்றப்படுகிறது

Trending News

Latest News

You May Like