#BREAKING : தமிழக ஆளுநரை சந்திக்கும் விஜய்..!
ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஊடகம் மற்றும் தகவல் தொடர்புப் பிரிவு ஆலோசகராக இருக்கும் திருஞானசம்பந்தம் சற்றுமுன் முக்கியமான தகவல் ஒன்றை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அதில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி.ஜோசப் விஜய் இன்று பிற்பகல் 1 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து பேசவுள்ளார். இந்த சந்திப்பு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.