1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : பிரபல தமிழ் சினிமா பிரபலம் காலமானார்..!

Q

பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் (80) காலமானார்.இளையராஜா இசையில் பாடத் தொடங்கிய பிறகு ஜெயச்சந்திரன் தமிழக மக்களுக்கு அதிகம் அறிமுகமானார். அவரது இசையில் ஜெயச்சந்திரன் பாடிய, ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு, காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி உட்பட 16 ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார்.

நீண்ட நாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜெயச்சந்திரன் திருச்சூர் அமலா மருத்துவமனையில் காலமானார்.

மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் 16,000 க்கும் மேற்பட்ட பாடல்களுக்கும் மேல் பாடியுள்ள ஜெயச்சந்திரன் தேசிய விருது, 5 கேரள மாநில விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, 4 தமிழ்நாடு மாநில விருதுகளை வென்றுள்ளார். அவர், கிழக்குச்சீமையிலே படத்தில் வரும் கத்தாழம் காட்டுவழி பாடல் தமிழ் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கிறது.

Trending News

Latest News

You May Like