#BREAKING:- மூத்த தமிழ் திரைப்பட நடிகர் சக்ரவர்த்தி காலமானார்..!!

பிரபல திரைப்பட நடிகர் சக்ரவர்வர்த்தி இன்று அதிகாலை மும்பையில் காலமானார். அவருக்கு வயது 62.உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் இன்று காலை மும்பையில் காலமானார்.
80-களில் பிரபலமான இவர் தமிழில் ரிஷிமூலம், முள்ளில்லாத ரோஜா உட்பட 80-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் சிவாஜி, ரஜினி, கமல் என்று பல நாயகர்களுடன் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சக்ரவர்த்தி. ரிஷிமூலம் படத்தில் சிவாஜியுடன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சக்ரவர்த்தி சோனி ஸ்டார் ஸ்போர்ஸ் சேனலில் பின்னணி குரல் கொடுக்கும் பணியில் இருந்து வந்தார். இன்று அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தூக்கத்திலேயே உயிர் பிரிந்திருக்கிறது.
இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் தங்களில் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்
ரிஷிமூலம் படத்தின் மூலம் தனது திரையுலகப் பிரவேசத்தைத் துவக்கிய சக்கரவர்த்தி தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கும் அளவிற்கு நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.மேலும் அந்தப் படத்தில் சிவாஜிகணேசனிடத்தில் பரிவும், கே.ஆர்.விஜயாவிடத்தில் கோபமும் கொண்ட பாத்திரத்தைத் திறம்பட ஏற்று நடித்தது பாராட்டும் வகையில் அமைந்துள்ளது. இதுவே அவரது திரையுலக பவனிக்கு பின்பாயிண்டாக அமைந்துவிட்டது.
ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் சிறிய வேடத்தில் வந்தாலும், நடிப்பு என்பது என்னவென்பதை பிற நட்சத்திரங்கள் அறியும் அளவிற்கு நடித்துள்ளார். ‘முள்ளில்லாத ரோஜா’ வில் முற்றிலும் ஊமையாக நடித்து தனது வாயசைப்பிலும், கண் அசைவிலும் நடிப்பை வெளிக் கொணர்ந்த நட்சத்திரம் சக்கரவர்த்தி. ’தூக்கு மேடை’ யில் பாரதியாராக வேடமேற்று நடித்து, பாரதியாராகவே மாறி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இவரது நடிப்பு என்றென்றும் போற்றத் தகுந்தது. ‘கொட்டு முரசே’ படத்திலும் பாரதியாகவும் உதயகீதம் படித்திலும் நடித்துள்ளார். எவ்வித ஆடம்பரமுமின்றி அமைதியுடன், நடமாடும் முடிசூடா மன்னன் சக்கரவர்த்தி.