#BREAKING : பிரபல பின்னணிப் பாடகி உமா ரமணன் காலமானார்..!
பிரபல பின்னணிப் பாடகி உமா ரமணன் (69) உடல் நலக் குறைவால் சென்னையில் காலமானார்.
80, 90-களில் பின்னணிப் பாடகியாக சினிமாவிலும் தன் கணவர் ரமணனுடன் இணைந்து மேடைக் கச்சேரிகளிலும் கலக்கியவர் உமா ரமணன்.
'ஆகாய வெண்நிலாவே', 'நீ பாதி நான் பாதி', 'பூபாளம் இசைக்கும்', 'ஆனந்த ராகம்'னு ராஜா மியூசிக்ல பாடின நிறைய பாடல்கள் சூப்பர் ஹிட்.
எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, வித்யாசாகர் உள்ளிட்டோரின் இசையில் எஸ்பிபி, யேசுதாஸ் உள்ளிட்ட பலருடன் இணைந்து பின்னணி பாடல் பாடியவர் உமா ரமணன். குறிப்பாக, நிழல்கள், தில்லுமுல்லு, வைதேகி காத்திருந்தாள், திருப்பாச்சி உள்பட பல்வேறு படங்களில் பாடியுள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.