#BREAKING : நாடு முழுவதும் யுபிஐ சேவை பாதிப்பு: பயனாளர்கள் அவதி..!
நாடு முழுவதும் யுபிஐ சேவை இன்று பாதிக்கப்பட்டுள்ளது.
இரவு 7.45 மணிக்கு மேல் Gpay, Phonepe, Paytm செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளது. HDFC, SBI, BANK OF BARODA, KOTAK MAHINDRA உள்ளிட்ட முக்கியமான வங்கிகளின் UPI சேவை முடங்கியுள்ளது. இரவு 8.30 மணியளவில் புகார் தெரிவிக்கும் வலைதளத்தில் 2,000-க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்துள்ளன.
அவற்றில் பெரும்பாலும் பணம் செலுத்தும்போது சிக்கல் எழுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடக்கம், உள்ளூர் கடைகளில் பொருட்கள் வாங்குவது, நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குப் பணம் அனுப்புவது போன்ற அன்றாட நடவடிக்கைகளுக்கு யுபிஐயை நம்பியிருக்கும் ஏராளமான மக்களை வெகுவாக பாதித்தது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்த பிரச்சினை நிலவி வருகிறது. தொழில்நுட்பக்கோளாறு காரணமாக யுபிஐ சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அதை சரிசெய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) இந்த தொழில்நுட்ப கோளாறு குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.