#BREAKING : அனைத்து அலுவலகங்களுக்கும் 22ம் தேதி அரைநாள் விடுமுறை - மத்திய அமைச்சர் அறிவிப்பு..!

2020 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அவர்களினால் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. பல்வேறு சோதனைகளைக் கடந்தும் 500 ஆண்டுகால கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட உள்ளது. அன்றைய தினத்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக கருதி மக்கள் அனைவரும் தங்கள் வீடுகள், கோயில்கள் மற்றும் ஊர்களில் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றும், தீபாவளி பண்டிகை போல் சிறப்பிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் ஜனவரி 22 ஆம் தேதி அன்று சிறப்பு விருந்தினர்களாக சுமார் 7,000 க்கும் அதிகமானவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும், நிறுவனங்களும் வரும் ஜனவரி 22ஆம் தேதி அரை நாள் விடுமுறை என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார். அதாவது, அன்று மதியம் 2.30 மணி வரை மட்டுமே அலுவலகங்கள், நிறுவனங்கள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.