1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானின் தமிழ்நாடு பயணம் ரத்து!

1

தேசிய கல்வி தரவரிசையில், முதல், 50 இடங்களைப் பிடித்த தொழில்நுட்ப நிறுவனங்களின் கண்டுபிடிப்பாளர்களை, முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் துறையினருடன் இணைக்கும் முயற்சியாக, கடந்த இரண்டாண்டுகளாக, 'இன்வென்டிவ் 2025' என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.


புதுடில்லி, ஹைதராபாதை தொடர்ந்து, இந்தாண்டு சென்னை ஐ.ஐ.டி.,யில், இந்த நிகழ்ச்சி நாளை 28ம் தேதியும், மார்ச் 1ம் தேதியும் நடக்க உள்ளது.இதை, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் துவக்கி வைக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டது 

இந்த நிலையில், தமிழகத்தில் கல்வித்துறைக்கு நிதி வழங்காதது, மும்மொழிக் கொள்கை விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் சென்னை ஐ.ஐ.டி. நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மத்திய இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் பங்கேற்பார் என கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like