1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : உதயநிதி வழக்கின் தீர்ப்பு வெளியானது..!

Q

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் கடந்த ஆண்டு ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், “சனாதன தர்மத்தை நாம் எதிர்க்கக் கூடாது. கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா ஆகிய நோய்களை எதிர்க்க மாட்டோம். ஆனால் ஒழிக்கவே முயற்சிப்போம். அதேபோல சனாதன தர்மமும். அதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சிறந்தது” என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
அவதூறு வழக்கு:
உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு, தமிழகத்தில் சாதாரணமாக கடந்து போனாலும், வட மாநிலங்களில் கொழுந்துவிட்டு எரிந்தது. சனாதன தர்மம் என்றால் வட மாநிலங்களில் இந்து மதம் என்ற பொருளும் உண்டு. எனவே, உதயநிதி இந்து மதத்தை தான் ஒழிக்க சொல்கிறார் என பாஜகவும் பிரச்சாரம் மேற்கொள்ள, மிகப்பெரிய பூதாகரமாக அவரது பேச்சு மாறியது. இதுதொடர்பாக உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் உதயநிதிக்கு எதிராக அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
வழக்கின் தீர்ப்பு:
அதேபோல, சென்னை உயர் நீதிமன்றத்திலும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்து வந்தார். இந்நிலையில், இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு புதன்கிழமை (மார்ச் 6) வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.
இந்நிலையில் அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி, திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு எதிரான இந்த முன்னணி தொடர்ந்த கோ-வாரண்டோ வழக்குககளை முடித்துவைத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
சனாதன பேச்சு விவகாரத்தில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை பதவிநீக்கம் செய்ய அவசியமில்லை எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like