#BREAKING : பஞ்சாப்பில் 2 ரயில்கள் மோதி விபத்து..!

அமிர்தசரஸ் - டெல்லி ரயில் பாதையில் உள்ள ஃபதேகர் சாஹேப்பில் 2 ரயில்கள் மோதி விபத்து..
அமிர்தசரஸ் - டெல்லி ரயில் பாதையில் உள்ள பஞ்சாப் ஃபதேகர் சாஹேப்பில் இன்று (ஜூன் 2) காலை 2 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் படுகாயமடைந்தனர்.
சரக்கு ரயிலின் இன்ஜின் தடம் புரண்டு பயணிகள் ரயில் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தடம் புரண்ட ரயிலை மீட்க ரயில்வே ஊழியர்கள் போராடி வருகின்றனர். இதில் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என இன்னும் தகவல் வெளியாகவில்லை.