#BREAKING : யானை தாக்கியதில் பாகன் உட்பட இருவர் உயிரிழப்பு..!
யானை மிதித்ததில் கோயிலுக்கு வந்த பக்தர் சிசுபாலன், பாகன் உதயகுமார் உயிரிழந்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வளர்க்கப்படும் யானையான தெய்வானை தாக்கிதில் யானைப் பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகிய இருவர் படுகாயமடைந்ததாக கோயில் நிர்வாகம் இன்று பிற்பகலில் தெரிவித்தது. பலத்த காயத்துடன் இருவரும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இருவரும் பலத்த காயத்துடன் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில் இருவரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
போலீசார் அளித்த தகவலின்படி, இன்று பிற்பகலில் யானைக்கு உணவு கொடுத்துக் கொண்டிருக்கும் போது திடீரென கோபமடைந்தது. பின்னர் பாகன் உதயகுமார் மற்றும் சிசுபாலன் ஆகியோரை தாக்கியதாகவும் போலிசார் தெரிவித்துள்ளனர்.