#BREAKING : தவெக தலைவர் விஜய்யின் ஆவணப்படம் வெளியீடு!

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் 2-ஆம் ஆண்டு தொடக்க விழா, மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் இன்று நடைபெற்று வருகிறது.
தொடக்க விழா நிகழ்ச்சியில் கட்சித் தலைவர் விஜய்யுடன் அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் பங்கேற்றுள்ளார்.
நிகழ்ச்சி மேடைக்கு வந்த விஜய், புதிய கல்விக் கொள்கை, மும்மொழித் திட்டத் திணிப்புக்கு எதிராக போராட உறுதியேற்போம் என தவெக சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் கையெழுத்திட்டு கெட்-அவுட் இயக்கத்தை தொடங்கிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து, நடிகராக இருந்து அரசியல் கட்சித் தலைவராக நடிகர் விஜய்யின் பரிணாம ஆவணப் படம் வெளியிடப்பட்டது. அதில், விஜய் ரசிகர் மன்றத்தில் தொடங்கி திரைத்துறையில் அரசியல் ரீதியாக விஜய் சந்தித்த பிரச்சனைகள், ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு, மக்கள் நலத்திட்ட பணிகள், நீட் எதிர்ப்பு உள்ளடங்கிய காட்சிகளை ஆவணப்படமாக உருவாக்கியுள்ளனர். இந்த காட்சிகளை பட்டிமன்ற பேச்சாளர் ராஜ் மோகன் தொகுத்து வழங்கினார்.
ஒரு தவறு நடந்த பிறகு தண்டணை தருபவன் அல்ல தலைவன்,தவறே நடக்காமல் பார்த்துக்கவள்பவனே தலைவன்🔥- தோழர் திரு ராஜ்மோகன் #தலைவர்விஜய் #தமிழகவெற்றிக்கழகம் #இரண்டாம்_ஆண்டில்_தவெக pic.twitter.com/1u0u2JKyUg
— 𝕵𝖔𝖍𝖓 𝕵𝕽™ (@vetrimaran_of) February 26, 2025