1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING: தே.ஜ., கூட்டணியிலிருந்து டிடி.வி., தினகரன் விலகல்..!

Q

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், கடந்த மக்களவைத் தேர்தலில் தேஜ கூட்டணியில் இணைந்தே போட்டியிட்டார்.

 

தென்காசியில் நேற்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அளித்த பேட்டி

 

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அமமுக யார் என்பதை நிரூபிப்போம். தொகுதி தோறும் சென்று நிர்வாகிகளை சந்தித்து தேர்தலுக்கு தயார் செய்து வருகிறோம். அப்போதுதான் அமமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது தெரியும். தொண்டர்கள் எதிர்பார்க்கும் கூட்டணி அமையும்.

கடந்த மக்களவைத் தேர்தலில் பிரதமராக மோடி வர வேண்டும் என்பதற்காக நிபந்தனையற்ற ஆதரவை அமமுக கொடுத்தது. ஆனால் 2026 சட்டமன்ற தேர்தல் என்பது வேறு. இந்த தேர்தலில் அமமுக நிலைப்பாட்டை டிசம்பரில் நிச்சயம் வெளிப்படையாக தெரிவிப்போம். மக்கள் விருப்பப்படி அமமுக கூட்டணி அமைக்கும். நிர்வாகிகள் தொண்டர்களின் கருத்தின் அடிப்படையில் தான் முடிவெடுக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இந்நிலையில் NDA கூட்டணியில் இருந்து அமமுக விலகியதாக டிடிவி தினகரன் அறிவிப்பு.

ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக டிடிவி தினகரன் அறிவிப்பு

Trending News

Latest News

You May Like