#BREAKING : நாளை அரை நாள் விடுமுறை..!
பள்ளி, கல்லூரிகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (அக்.30) அரை நாள் விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு.
தீபாவளி பண்டிகை 31-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காலை மட்டும் கல்வி நிலையங்கள் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது.
ஏற்கனவே தீபாவளிக்கு அடுத்த நாள் அரசு விடுமுறை அறிவித்ததால், தொடர்ச்சியாக 4 நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இருப்பது குறிப்பிடத்தக்கது.