1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : புதுச்சேரி - விழுப்புரம் - நாகை 4 வழிச்சாலையில் ஜனவரி முதல் சுங்க கட்டணம்..!

1

விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே 180 கி.மீ., துாரத்துக்கு, நான்கு வழிச்சாலை திட்டப்பணிகள் கடந்த 2019ம் ஆண்டு துவங்கியது.இந்த பணிகள் 4 கட்டங்களாக பிரிக்கப்பட்டு, தனித்தனியாக நடந்து வருகிறது.

முதல்கட்ட பணி விழுப்புரம் ஜானகிபுரத்தில் துவங்கி, புதுச்சேரி அடுத்த எம்.என்.குப்பம் வரை உள்ள 29 கி.மீ., துாரத்துக்கான (திட்ட மதிப்பீடு ரூ.1013 கோடி) பணி ஆகும். எம்.என்.குப்பம் முதல், கடலுார் மாவட்டம் பூண்டியாங்குப்பம் வரையிலான 38 கி.மீ., துாரம் (ரூ.1228 கோடி) இரண்டாம் கட்ட பணி.

பூண்டியாங்குப்பம் முதல், மயிலாடுதுறை அடுத்த சட்டநாதபுரம் வரையிலான 56 கி.மீ., துாரம் (ரூ.2120.40 கோடி) மூன்றாம் கட்டம். சட்டநாதபுரத்திலிருந்து நாகப்பட்டினம் வரை உள்ள 55.75 கி.மீ., (திட்ட மதிப்பீடு ரூ.1905.37 கோடி )நான்காம் கட்ட பணி என வரையறை செய்யப்பட்டு, மொத்தம் 179.55 கி.மீ., துாரத்துகு நான்கு வழிச்சாலை பணிகள் நடக்கிறது.


இந்த சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டபோது 60 கி.மீ-க்கு சுங்கச்சாலை அமைக்கப்படாது என தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கார், ஜீப், வேன், இலகுரக வாகனங்கள் ஒரு முறை செல்ல ரூ.60, 1 நாளுக்குள் திரும்ப ரூ.90, மாத பாஸ் கட்டணமாக ரூ.1,985ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்திற்குள் ஒருமுறை செல்ல இலகுரக வாகனங்களுக்கு ரூபாய் 30 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மண் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஒரு முறை செல்ல ரூபாய் 315 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய 4 வழிச்சாலையில் சுங்கக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது வாகன ஓட்டிகள், அப்பகுதி விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


புதுச்சேரி எல்லைப் பகுதியான மதகடிப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவக்கல்லூரி, ஜிப்மர் மருத்துவமனைக்கு செல்வோரும் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

Trending News

Latest News

You May Like