1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : தில்லியில் அடுத்த முதல்வர் பெயர் அறிவிப்பு..!

Q

தில்லியில் அடுத்த முதல்வர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது

 தில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் புதிய தலைமையகத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது மனைவி சுனிதா கெஜ்ரிவால் மற்றும் கட்சியின் பிற மூத்த தலைவர்களுடன் இணைந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றியபோதுதான், யாரும் எதிர்பாராத வகையில், ராஜினாமா முடிவை அறிவித்திருந்தார்.

இதனால், அரவிந்த் கெஜ்ரிவாலைத் தொடர்ந்து தில்லியின் அடுத்த முதல்வராக அமரப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேவேளையில் மணீஷ் சிசோடியாவும் தானும் பதவியில் அமர மாட்டோம் என்று கெஜ்ரிவால் கூறிவிட்டதால், அடுத்த முதல்வர் என்ற இடத்தில் மணீஷ் சிசோடியா இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

தற்போதைய சூழ்நிலையில், தில்லி அமைச்சரும், கல்வி நிலைக்குழு தலைவருமான அதிஷி, முதல்வர் போட்டியில் முன்னிலையில் உள்ளார். 

புதிய முதல்வராக அதிஷி பெயரை அரவிந்த் கெஜ்ரிவால் பரிந்துரைத்தார். இதனையடுத்து, AAP எம்எல்ஏக்கள் கூட்டத்தில், அக்கட்சியின் புதிய சட்டமன்றக்குழு தலைவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

தொடர்ந்து, இன்று மாலை 4 மணிக்கு, துணை நிலை ஆளுநரை சந்திக்கும் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, புதிய முதல்வருக்கான எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தையும் வழங்க உள்ளார்.

Trending News

Latest News

You May Like