#BREAKING : குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட்டது TNPSC..!

குரூப்-4 தேர்வை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.
இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜனவரி 30-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு, ஜுன்-9 ம் தேதி நடைபெற்று முடிந்தது.
சுமார் 20 லட்சம் பேர் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் 7,247 மையங்களில் சுமார் 15,88,000 தேர்வர்கள் தேர்வு எழுதி இருந்தனர். அதன் பின்னர் குரூப்-4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. பின் மேலும் 2,208 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 8,932 ஆக உயர்ந்தது.இந்நிலையில் இன்று குரூப் 4 தேர்வுக்கான ரிசல்ட் வெளியாகியுள்ளது.
www.tnpscresults.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்
உங்கள் பதிவு எண்ணை உள்ளிடவும்
உங்கள் பிறந்த தேதியை உள்ளிடவும்
Capche-வை உள்ளிடவும்
Submit சொடுக்கவும்
www.tnpscexams.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்
Group IV Results-ஐ சொடுக்கவும்
உங்கள் பதிவு எண்ணை உள்ளிடவும்
உங்கள் பிறந்த தேதியை உள்ளிடவும்
Capche-வை உள்ளிடவும்
Submit சொடுக்கவும்