1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : திருவண்ணாமலை நிலச்சரிவு : ஒருவர் சடலமாக மீட்பு..!

Q

திருவண்ணாமலையில் பெய்த கனமழையில் அண்ணாமலையார் மலையில் மண் மற்றும் பாறை சரிவு ஏற்பட்டது. இதில் 11வது தெருவில் 40 டன் எடை கொண்ட பாறை உருண்டு 2 வீடுகள் சேதம் அடைந்தன. பாறை உருண்டு விழுந்த வீட்டில் இடிபாடுகளில் 7 பேர் சிக்கியிருக்கலாம் என்று அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந் நிலையில் சம்பவ பகுதியில் மீட்பு பணிகளை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில் கூறியதாவது;
திருவண்ணாமலையில் இதுபோன்ற மண்சரிவு என்ற நிகழ்வு ஏற்பட்டதே இல்லை. இம்முறை அதிக மழை பெய்ததால் மண் சரிந்துள்ளது. பாறாங்கற்கள் உருண்டதில், மலையின் கீழே இருந்த 2 வீடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. அதில் ஒரு வீட்டில் இருந்த அனைவரும் வெளியேறி விட்டனர்.
மற்றொரு வீட்டில் உள்ள 7 பேரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டுள்ள நிலை ஏற்பட்டது. அவர்களை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கிறோம்.
தேசிய பேரிடர் குழுவும், மேலும் ஒரு துணைக்குழுவும் களத்தில் இறங்கி உள்ளது. இங்குள்ள மக்கள் அனைவரையும் அருகில் உள்ள அரசு பள்ளியில் தங்க வைத்துள்ளோம். இங்கே ஒரு பெரிய பாறை இருக்கிறது. அந்த பாறை உருண்டால் இன்னும் சேதம் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மண்ணின் உறுதித்தன்மையை சோதித்து அறிந்த பின்னரே அந்த பாறை அகற்றப்படுமா என்பது பற்றி கூற முடியும். அந்த 7 பேரும் உயிருடன் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். தொடர்ந்து இங்கு மழை பெய்து கொண்டு தான் இருக்கிறது. எங்களின் மீட்பு பணி முயற்சி தொடர்ந்து நடைபெறும் என்றார்.
இந்நிலையில், திருவண்ணாமலை தீப மலை அடிவாரத்தில் மண் சரிவில் சிக்கிய 7 பேரில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது 

Trending News

Latest News

You May Like