1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : தக் லைஃப்' ரிலீஸ் ஆகாது!

Q

கன்னட மொழி சர்ச்சை, 'தக் லைஃப்' பட வெளியீட்டில் தொடர்ந்து சிக்கலை ஏற்படுத்துகிறது. அங்கு படம் வெளியாவதற்கு பாதுகாப்பு கேட்டு கர்நாடக நீதிமன்றத்தில் கமல் தொடர்ந்த வழக்கில்,"மன்னிப்பு கேட்பதில் கமலுக்கு என்ன ஈகோ?" என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு கமல் தரப்பு 'தக் லைஃப்' பட வெளியீட்டை கர்நாடகாவில் ஒத்திவைப்பதாக தெரிவித்ததால், வழக்கில் தீர்ப்பும் ஒத்திவைக்கப்படுவதாக நீதிமன்றம் கூறியது.

கர்நாடகாவில் தக் லைஃப் பட வெளியீட்டை ஒத்திவைப்பதாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வாதம்...

ஒரு வாரம் கால அவகாசம் வேண்டும் என ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் கோரிக்கை...

கமல் மன்னிப்பு கேட்க மறுத்த நிலையில் கர்நாடகாவில் தக் லைஃப் படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு...

கர்நாடகாவில் வரும் 5-ம் தேதி தக் லைஃப் திரைப்படம் வெளியாகாது என கர்நாடக ஐகோர்ட் தெரிவித்துள்ளது. கன்னட மொழி விவகாரம் தொடர்பாக அவர் பேசிய கருத்து சர்ச்சையான நிலையில், ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் கமல் மன்னிப்பு கேட்க மறுத்துள்ள நிலையில், பிரச்னையை தீர்த்துவிட்டு கர்நாடகாவில் தக் லைஃப் வெளியிடப்படும் எனவும், 5-ம் தேதி வெளியாகாது என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like