#BIG BREAKING : பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் 3 பேர் பலி..!
கடலூர் செம்மங்குப்பம் அருகே குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பள்ளி வேன் இன்று காலை சென்று கொண்டிருந்தது. செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் டிரைவர் ரயில்வே கேட்டை கடக்க முயற்சி செய்தார். அப்போது சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் பள்ளி வாகனம் மீது மோதியது.
இந்த விபத்தில் பள்ளி மாணவர் இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 10 பேர் காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த பள்ளி மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. ரயில் வருவதை டிரைவர் கவனிக்காமல் கடக்க முயன்ற போது விபத்து நிகழ்ந்துள்ளது என தெரிகிறது. ரயில் செல்லும் போது கேட் பூட்டப்பட்டு இருந்ததா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
ரயில் வரும்போது ரயில்வே கேட் மூடப்படாததால் இந்த விபத்து நேரிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.