#BREAKING : சமுதாயக் கூட மேற்கூரை இடிந்து 3 பேர் பலி..!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கனமழையால் கொழுமம் ஊராட்சியில் உள்ள சாவடியில் சமுதாய கூடத்தின்முன்புர மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.
சமுதாயக் கூட மேற்கூரை இடிந்து விழுந்ததில், பேருந்துக்காக காத்திருந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பேருந்திற்காக காத்திருந்த கவுதம், மணிகண்டன்,முரளி ராஜன் மரணம்
மேலும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கனமழை தொடங்கிய முதல் நாளிலேயே உயிரிழப்பு சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.