1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : சோலையார் ஆற்றில் மூழ்கி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு..! 2 பேரை தேடும் பணி தீவிரம்..!

1

கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பிரதேசமாக உள்ளது.வால்பாறை சுற்று வட்டார பகுதியில் பெய்யும் மழை நீர் ஆங்காங்கே உள்ள ஆறுகள் வழியாக சோலையாறு அணையை சென்றடைகிறது.345 அடி உயரத்தில் சோலையாறு அணை இன்றும் கம்பீரமாய்க் காட்சியளிக்கிறது. இங்கு சோலைக் காடுகள் அதிகம் உள்ளதாலும், அதன் மத்தியில் கட்டப்பட்டதாலும் இந்த அணைக்கு அதே பெயரை வைத்திருக்கிறார்கள். 

விடுமுறை நாட்களிலும் வார இறுதியும் இங்கு மக்கள் குடும்பதோடு வந்து இயற்கை அழகை ரசித்து செல்லுவர்.இந்நிலையில் இன்று சோலையாற்றில் 5 இளைஞர்கள் குளிக்க வந்துள்ளனர். ஆழமான பகுதிக்கு சென்றதால் ஆற்றில் மூழ்கி இளைஞர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளார்.  நீரில் மூழ்கிய 5 இளைஞர்களில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. 2 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like