# BREAKING : சென்னையில் இந்த சாலைகளில் நாளை மதியத்துக்கு மேல் பஸ் சேவை இருக்காது...!
ஃபெங்கல் புயல் காரணமாக நாளை சென்னை, புதுச்சேரியில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் நாளை பிற்பகலில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ளது.
சென்னையில் நாளை மாநகர அரசு பஸ்கள் இயங்குமா? இல்லையா? என்பது பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி புயல் காரணமாக நாளை சென்னை மாநகர பேருந்துகள் நாளை வழக்கம் போல இயங்கும். புயல் காரணமாக போக்குவரத்து சேவையில் மாற்றம் இல்லை என்று சென்னை பெருநகர பேருந்து போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை ஓஎம்ஆர் மற்றும் இசிஆர் சாலைகளில் மட்டும் மதியத்துக்கு மேல் பஸ் சேவைகள் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகலில் புயல் கரையைக் கடக்கும் போது கிழக்கு கடற்கரைச் சாலை, ஓ.எம்.ஆர். சாலையில் பொதுப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.
அதேபோல் ரயில் சேவையிலும் மாற்றம் என்பது தற்போது வரை செய்யப்படவில்லை. இருப்பினும் காற்றின் வேகத்திற்கு ஏற்ப ரயில் சேவையில் மாற்றம் இருக்கும் என ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.