1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : தீர்ப்பு வெளியானது..! சஞ்சய் ராய் குற்றவாளி..!

Q

மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த 31 வயது பெண் பயிற்சி டாக்டர் கடந்தாண்டு ஆகஸ்ட் 9ம் தேதி அங்குள்ள கருத்தரங்கக் கூடத்தில் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். நாடு முழுதும் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவத்தில், அங்கு பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவன் கைது செய்யப்பட்டான்.

இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., அதிகாரிகள், மருத்துவக் கல்லுாரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், பெண் டாக்டர் உடல் கண்டெடுக்கப்பட்ட மருத்துவமனையிலும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தினமும் என 162 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டு 120 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. கடந்தாண்டு அக்டோபர் 7ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில், இன்று (ஜனவரி 18) நீதிபதி தீர்ப்பு அளித்தார். சஞ்சய் ராய் குற்றவாளி என அறிவித்துள்ள அவர், தண்டனை வரும் 20ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like