#BREAKING : நாடே எதிர்பார்த்த வழக்கில் தீர்ப்பு வெளியானது..!

மேற்கு வங்க மாநிலத்தின் சீல்டா மாவட்ட நீதிமன்றம் இன்று(ஜன.18) இந்த வழக்கு சம்பந்தமாக தீர்பு வழங்கி உள்ளது. "இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் 64,66 மற்றும் 103(1) பிரிவின் கீழ் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், வழக்கில் தண்டனை விவரங்கள் வெளியாகும். எனக் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி அனிர்பன் தாஸ் தெரிவித்தார்.
இந்த கொடூர சம்பவம் அரங்கேறி 162 நாட்களுக்குப் பிறகு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இது குறித்து பாதிக்கப்பட்டவரின் தாய் கூறியதாவது; "சஞ்சய் குற்றவாளி என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்செயலில் அவர் தனியாக இல்லை.
இன்னும் சிலர் கைது செய்யப்படாமல் உள்ளனர். எனவே இன்னும் நீதியானது கிடைக்கவில்லை.
இதில் சம்பந்தப்பட்ட மற்ற குற்றவாளிகளைப் பிடித்து அவர்கள் தண்டிக்கப்படும் நாள் வரை நாங்கள் காத்திருப்போம்" எனத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவரின் தந்தை கூறியதாவது; "குற்றவாளி ராய் தண்டிக்கப்படுவதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம். அதேபோல் குற்றம் நடத்த இடத்தில் மேலும் 4 பேர் இருந்துள்ளனர். அவர்களை விரைவில் பிடித்து தண்டிக்க வேண்டும்" என்றார்.
இந்நிலையில் கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.