#BREAKING : ஒலிம்பிக்... இந்தியாவிற்கு அதிர்ச்சி..!
துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதித்த இந்தியாவின் மனு பாக்கர், துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து பங்கேற்றார். அதிலும், வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர், ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்தார்.
இதையடுத்து, துப்பாக்கி சுடுதல் 25 மீட்டர் பிஸ்டல் மகளிர் தனிநபர் பிரிவில் களமிறங்கிய மனு பாக்கர், தகுதிச்சுற்றில் 590 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இந்நிலையில், இன்று இறுதிப் போட்டி நடைபெற்ற நிலையில், மூன்றாவது பதக்கம் வெல்லும் வாய்ப்பை மனு பாக்கர் தவறவிட்டார். இன்று (ஆகஸ்ட் 3) நடந்த பாரிஸ் ஒலிம்பிக் 2024ல் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் அவர் பதக்கம் வெல்வார் என ஒட்டு மொத்த இந்திய நாடே எதிர்பார்த்தது. ஆனால், இறுதிமூச்சு வரை போராடிய மனு பாக்கரால், 4ஆவத இடமே வர முடிந்தது. இதனால் மனு பாக்கர் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.