#BREAKING : தவெகவில் குழந்தைகள் அணி..!

இளைஞரணி, மகளிரணி, மாணவரணி வரிசையில் குழந்தைகள் அணியை அமைக்கிறது விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்
தமிழக வெற்றிக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள அணிகள் குறித்து பட்டியல் வெளியாகி உள்ளது.
மூன்றாம் பாலினத்தவர்கள், காலநிலை மாற்றம், தகவல் சரிபார்ப்பு, குழந்தைகள் அணி உள்ளிட்ட 28 அணிகள் இடம்பெற்றுள்ளது. தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தவெக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து இந்த பட்டியல் வெளியாகியுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.